தி போப்ஸ் எக்ஸார்சிஸ்ட் ஆங்கில பேய் படம் தமிழில் வெளிவர உள்ளது.
ஆங்கில பேய் படம்
ஜூலியஸ் அவேரி இயக்கத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் தி போப்ஸ் எக்ஸார்சிஸ்ட். இப்படத்தில் ரூல்ஸ் கிரௌவ், டேனியல் ஜூவட்டோ, அலெக்ஸ் இசோ, பிரான்கோ நீரோ உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். ஹாரர் பேய் படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் அமோர்த் என்ற பாதிரியாருக்கு நடந்த நிஜ சம்பவங்களை மையமாகக் கொண்டது. அவர் எழுதிய குறிப்புகள் வைத்து இப்படம் ஆனது உருவாக்கப்பட்டுள்ளது. சோனி பிக்சர்ஸ் வெளியிடும் இந்த படம் ஏப்ரல் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்தியாவில் ஏப்ரல்7ஆம் தேதி தமிழ், ஹிந்தி, தெலுங்கில் வெளியாக உள்ளது.
சாமியார் vs பாதிரியார்
ஹாலிவுட் படங்களை பார்ப்பதெற்கென்று பல ரசிகர்கள் இந்தியாவில் உள்ளனர். பல ஆங்கில படங்கள் இந்தியாவில் வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் இந்தப்படமும் ரசிகர்கள் மதில் பேசும் படமாக இருக்கும் என்று எதிர்பாக்கப்படுகின்றது. மேலும் தமிழில் பல பேய் படங்களை பார்த்த ரசிகர்களுக்கு இந்த தி போப்ஸ் எக்ஸார்சிஸ்ட் படத்தின் மூலம் புது அனுபவம் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தமிழ் பேய் படங்களில் அதிகமாக அமானுஷ்யம், சாமியார்கள் உள்ளிட்ட விஷயங்கள் இடம் பெரும். அதே போல் இந்த ‘தி போப்ஸ் எக்ஸார்சிஸ்ட்’ படத்தில் பாதிரியார் இடம் பெறுகிறார். இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.















































