விஜய் டிவியில் ராஜா ராணி 2 தொடர் தற்போது பரபரப்பான பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

விறுவிறுப்பான திருப்பங்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 தொடர் தற்போது விறுவிறுப்பான கதை களத்துடன் சென்று கொண்டிருக்கிறது. இதன் முதல் சீசன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, சீசன் 2 தற்போது டிஆர்பியில் முன்னிலையில் உள்ளது. இத்தொடரின் லேட்டஸ்ட் எபிசோடில் கள்ள நோட்டு வழக்கில் ஆதி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், தற்போது அர்ச்சனாவால் ஒரு புதிய பிரச்சனையும் வருகிறது.

தர்ம அடி

ஏற்கனவே தனக்கு பிறந்தது பெண் குழந்தை என்ற உண்மையை மறைத்து பக்கத்து வீட்டில் இருந்த குழந்தையை தன் குழந்தை என்று ஏமாற்றி வருகிறார். இதுவரை யாருக்கும் உண்மை தெரியாமல் இருந்தது. ஆனால் சமீபத்தில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சந்தியாவின் பெண் குழந்தையை திருடர்கள் திருடிச் சென்று செல்கின்றனர். இதை பார்த்து அதிர்ச்சியான அர்ச்சனா தாய் பாசத்தில் எல்லா உண்மையும் கூறி விடுகிறார். ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகிறது. அதேசமயம் கடத்தப்படும் குழந்தையை கண்டுபிடித்து கொண்டு வருகிறார் சந்தியா. அர்ச்சனா செய்த இந்த செயலால் அவரது அம்மா அவரை தர்ம அடி அடிக்கிறார். இப்படி பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த ராஜா ராணி 2 தொடரும், இந்த எபிசோட் ப்ரோமோவும் வைரல் ஆகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here