சமூகவலைத்தளத்தில் பிஸியாக இருக்கும் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

கை நழுவிய வாய்ப்புகள்

விஜய் டிவியில் பிரபலமான பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் ரோஷினி ஹரிப்ரியன். பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், இந்த தொடருக்காக பல படங்களின் வாய்ப்பை நழுவவிட்டதாகவும் கூறியுள்ளார். சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்தில் செங்கேணி என்ற கதாபாத்திரத்தில் லிஜோ மோல் ஜோஸ் நடித்து அசத்தி இருந்தார். ஆனால் லிஜோ மோல் ஜோஸூக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதற்கு முன், அந்த கேரக்டரில் நடிக்க ரோஷினி ஹரிப்ரியனிடம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பாரதி கண்ணம்மா தொடரில் பிஸியாக இருந்ததால் அந்த படத்தின் வாய்ப்பை நழுவவிட்டதாக வருத்தமாக கூறியிருந்தார் ரோஷினி ஹரிப்ரியன்.

போட்டோஷூட் நாயகி

பாரதி கண்ணம்மா சீரியலுக்காக பல படவாய்ப்புகளை நழுவவிட்ட இவர், அந்த தொடரில் இருந்து திடீரென விலகினார். பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். தற்போது அந்த கண்ணம்மா கதாபாத்திரத்தில் வினுஷா தேவி நடித்து வருகிறார். மேலும் அத்தொடரின் முதல் பாகம் முடிந்து தற்போது இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அடிக்கடி தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் ரோஷினி. சமீபத்தில் இவர் நீல நிற சல்வாரில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுக்க முயற்சி செய்துவரும் ரோஷினி, தற்போது இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறாராம். தனக்கேற்ற கதாபாத்திரம் அமைந்தால் விரைவில் ஹீரோயினாக அறிமுகமாவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here