பத்து தல படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளிவந்துள்ளது.
மாற்றி போட்ட சம்பவம்
சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் பத்து தல திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு வரிசையில் இந்த படமும் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நீண்ட நாட்களாக பத்து தல படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில், நேற்று வெளியான முதல் நாளிலேயே ரோகிணி தியேட்டரில் நடந்த தீண்டாமை சம்பவம் படக்குழுவினரின் மொத்த பிளானையும் மாற்றி போட்டது.
கலவையான விமர்சனம்
மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகின்றது. படக்குழுவினர் இப்படத்தின் புரமோஷனில் பல நாட்களாக பாடுபட்டு வந்த நிலையில், படத்தைப் பார்த்த பலரும் அப்செட் ஆகியுள்ளனர். தற்போது பத்து தல படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்களை ரசிகர்கள் பேசத் தொடங்கிவிட்டனர். பத்து தல வெளியான முதல் நாளில் வெறும் ரூ.5 முதல் 6 கோடி வரை தான் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. பாதி படத்திற்கு மேல் தான் சிம்பு என்ட்ரி கொடுக்கிறார் என்றும் ரசிகர்கள் கிண்டல் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
கஷ்டம் தான்
தொழில் ரீதியாக சிம்புவுக்கும், தனுஷுக்கும் கடும் போட்டி இருக்கும் நிலையில், சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படம் வசூலையும், பத்து தல படத்தின் வசூலையும் ஒப்பிட்டு மார்க் போடத் துவங்கிவிட்டனர். தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படம் முதல் நாளில் ரூ.7 கோடி வரை வசூல் ஈட்டியதாகவும், ஒட்டு மொத்தமாக இந்த திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்ததாகவும் கூறியிருந்தனர். தற்போது பத்து தல ஓபனிங்கை பார்த்தால் இந்த சாதனையை முறியடிப்பது கஷ்டம்தான் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.