17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அப்பாவான பக்ருவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

காமெடியில் அசத்தல்

தமிழ் சினிமாவில் டிஷ்யூம் படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பக்ரு. மலையாளத்திலும் பல படங்கள் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வைத்துள்ளார். 2013 ஆம் ஆண்டு வெளியான குட்டியும் கோளும் என்ற படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார்.

அப்பாவான பக்ரு

கடந்த 2006 ஆம் ஆண்டு காயத்ரி மோகன் என்பவரை திருமணம் செய்துகொண்டார் பக்ரு. இந்த தம்பதிகளுக்கு 14 வயதில் ஒரு மகள் இருக்கும் நிலையில், தற்போது இரண்டாவதாக குழந்தை பிறந்துள்ளது. திருமணம் ஆகி 17 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தந்தையான பக்ருவிற்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர். தனது பிஞ்சு குழந்தையை கையில் வைத்துகொண்டு, தன் மூத்த மகளுடன் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இவருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்ததுடன் தமிழ் படங்களில் நடிக்கும்படி ரசிகர்கள் அன்பு கோரிக்கையும் வைத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here