தன்னை பற்றி வெளியான விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.
விவாகரத்து சர்ச்சை
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் விஷ்ணு விஷால். அடுத்தடுத்து படங்களில் பிஸியாக இருக்கும் விஷ்ணு விஷால், சில தினங்களுக்கு முன் சமூக வலைதளத்தில், “its ok, I tried again, I failed again, I learnt again” என பதிவிட்டு இருந்தார். மேலும், இதுவே கடைசி தோல்வியாக இருக்கட்டும், ஆனாலும் இது துரோகம் ஏமாற்றம் தான்” எனவும் குறிப்பிட்டு இருந்தார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் இவர் இரண்டாவது மனைவி ஜுவாலா கட்டாவை விவாகரத்து செய்ய போகிறாரா? என்று கேள்வி எழுப்பியதுடன், சிலர் அதை உறுதி செய்யும் வகையில் வதந்திகளை பரப்பி வந்தனர்.
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்தான நடிகர் விஷ்ணு விஷால், தற்போது 2-வது திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். அவர் போட்ட பதிவு வைரலானவுடன் டெலிட் செய்துவிட்டு அதற்கான விளக்கத்தையும் பதிவிட்டு உள்ளார். “நான் போட்ட பதிவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று விளக்கம் கொடுத்துள்ளார். “என்னுடைய ப்ரொபஷனல் வாழ்க்கையை பற்றி தான் அந்த டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அதற்குள் விவாகரத்து என செய்து போட்டுவிட்டார்கள். ஒவ்வொருவருக்கும் நாம் கொடுக்கும் மிகப்பெரிய கிஃப்ட் நம்பிக்கை. ஆனால் தோற்கும்போது நாம் நம்மையே குறை சொல்கிறோம். அவ்வளவு கடினமாக இருக்க தேவை இல்லை. நான் இதை தான் டுவிட்டரில் சொல்ல வந்தேன். ஆனால் அதற்குள் விவாகரத்து என்று செய்தி வெளியாகிவிட்டது” என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவின் மூலம் விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால். .















































