ஜெயிலர் பட ஷூட்டிகிற்காக கொச்சி சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் ஸ்டைலாக நடந்து வரும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஜெயிலரில் பிஸியான ரஜினி
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்றது. ஜெயிலர் திரைப்படத்தில் கன்னட நடிகரான சிவராஜ் குமார், மலையாள நடிகர் மோகன் லால், தெலுங்கு நடிகர் சுனில், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விறுவிறுப்பாக நடந்து வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து பல புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின.
வேகமாக நடந்த ரஜினி
சமீபத்தில் இப்படத்தின் 70% படப்பிடிப்பு நிறைவு பெற்றது. லேட்டஸ்ட்டாக ரஜினியின் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது ரஜினிகாந்த் ஜெயிலர் பட ஷூட்டிங்கில் பங்கேற்க கொச்சி சென்றுள்ளார். கொச்சி விமான நிலையத்தில் வேகமாக நடந்து வந்து எஸ்கலேடரில் ஸ்டைலாக இறங்கி வரும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றது. ரஜினியின் அருகில் நெல்சன் திலீப்குமாரும் உள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ரஜினியின் ஸ்டைலை கொண்டாடி வருகின்றனர்.