12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று நடந்த பாடத் தேர்வுகளில் 47 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாரிகள் அதிர்ச்சி
12 வகுப்புக்கான பொது தேர்வு கடந்த 13-ம் தேதி தொடங்கியது. தமிழ் மொழி பாட தேர்விற்கு 50 ஆயிரம் மாணவர்கள் வரவில்லை என தேர்வுத்துறை அதிகாரப் பூர்வமாக அறிவித்திருந்த நிலையில், அதனைதொடர்ந்து நடைபெற்ற ஆங்கில பாட தேர்வுக்கும் 50 ஆயிரம் மாணவர்கள் வரவில்லை. இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில், முக்கிய தேர்வுகளுக்கு மாணவர்களை வரவைக்க வேண்டும் என்று அதிகாரிகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார்
.
மீண்டும் ஆப்சென்ட்
இந்நிலையில், நேற்று நடைபெற்ற இயற்பியல் பொருளியல் உள்ளிட்ட முக்கிய தேர்வுகளுக்கு கூட 47 ஆயிரம் மாணவர்கள் வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாணவர்களை தேடிப் பிடித்து தேர்வுக்கு வரவைக்க முயற்சி எடுத்துவரும் நிலையில், பெரும்பாலான மாணவர்கள் அவர்கள் சொந்த ஊரிலோ, வெளியிடங்களிலோ பணியில் உள்ளது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக மாணவர்களை தேர்வுக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.














































