இன்று தனது 53வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நடிகை ஷோபானாவிற்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அசத்தும் நடிப்பு

மார்ச் 21, 1970 ஆம் ஆண்டு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்த ஷோபனா, பரதநாட்டிய கலைஞராக மட்டுமல்லாமல் ஒரு நடிகையாகவும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர். மலையாளம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த நடிகை சோபனா, ஒருசில ஹிந்தி மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். திருமணம் செய்து கொள்ளாத நடிகை ஷோபனா, 2011 ஆம் ஆண்டு முதல் பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

நடன கலைஞர்

தமிழில் இவர் நடிப்பில் வெளியான எனக்குள் ஒருவன், மருதாணி, காதல் கீதம், வாத்தியார் வீட்டு பிள்ளை, தளபதி உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பு பெற்றதும் குறிப்பிடத்தக்கது. பரதநாட்டிய குடும்பத்தில் பிறந்த இவருக்கு நடிப்பைவிட நடனத்தில் மிகுந்த ஆர்வம் உண்டு. அதனாலேயே இப்போதும் பல வெளிநாடுகளுக்குச் சென்று டான்ஸ் பெர்பார்மன்ஸ் செய்து வருகிறார். நம் நாட்டு பாரத கலையை பல நாடுகளிலும் பிரபலமாக்கி வரும் நடிகை ஷோபனாவுக்கு இன்று பிறந்தநாள். கோலாகலமாக இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை சோபனாவுக்கு திரை பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்கள் பகிர்ந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here