நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை திவ்யா ஸ்ரீதர் தான் அனுபவித்து வரும் பிரச்சனைகளை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தொடரும் சர்ச்சை

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் திவ்யா. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக தனது முதல் கணவரை பிரிந்த திவ்யா, இரண்டாவதாக தன்னுடன் இணைந்து சீரியலில் நடித்த அர்னாவை திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியையும் பகிர்ந்தார். அர்னாவ், செல்லம்மா சீரியலில் நடிக்கும் அன்ஷிதாவுடன் நெருக்கமாக பழகுவதாகவும், தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கூறியிருந்தார் திவ்யா. அதன் அடிப்படையில் அர்னாவ் மீது வழக்குப்பதிவு செய்து சிறையிலும் அடைத்தனர். அதன்பிறகு அர்னாவ் ஜாமீனில் வெளியே வந்தார்.

ஓய்வெடுக்க நேரம் இல்லை

பல பிரச்சனைகளுக்கு பிறகும் ஓயாத திவ்யா, அர்னாவ் மீது எக்கச்சக்க குற்றச்சாட்டுகளை முன் வைத்து பல வீடியோக்களை வெளியிட்டது மட்டுமல்லாமல் பல பேட்டிகளிலும் கூறி வந்தார். தற்போது இருவரும் தனித்தனியே வாழ்ந்து வரும் நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் தான் அனுபவித்து வரும் கஷ்டங்களை தெரிவித்துள்ளார் திவ்யா. அவர் கூறுகையில்; “அவன் ஏமாற்றிவிட்டு போய்விட்டான் இனி அவனுடைய குழந்தை எதற்கு என்று பலரும் கூறினார்கள். எந்த உயிரையும் கொல்லும் உரிமை நமக்கு இல்லை. கடவுள் கொடுத்த குழந்தையை பெற்றெடுக்கவே விரும்புகிறேன். நான்கு மாதத்தில் பிரேக் எடுக்க விரும்பினேன். ஆனால் என் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் நடந்துவிட்டது. அதனால் பொருளாதார ரீதியாக நான் வேலை செய்ய வேண்டிய சூழல்நிலையில் உள்ளேன். இப்பொழுது ஒன்பது மாதம் நடந்து கொண்டிருக்கின்றது. இன்னும் 10 முதல் 15 நாட்களில் குழந்தை பிறந்துவிடும். ஆனால் இன்னும் கூட ஓய்வெடுக்காமல் நடித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. அதனால் இது ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவனை நல்ல மனிதனாக வளர்ப்பேன். பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதை அவனுக்கு கற்றுக் கொடுப்பேன்” என்று நடிகை திவ்யா அந்த பேட்டியில் உருக்கமாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here