இன்ஸ்டா லைவில் தரமற்ற கேள்விகளை கேட்ட நெட்டிசனுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன்.

எதிர்பார்ப்பில் சலார்

ஹேராம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன், தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து வருகிறார். தமிழில் ஏழாம் அறிவு, பூஜை, புலி, வேதாளம், லாபம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் இவருக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால், தற்போது தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தெலுங்கில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வீர சிம்ஹா ரெட்டி, வால்டர் வீரய்யா ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது சலார் படத்தில் நடித்து முடித்துள்ள ஸ்ருதிஹாசன், இந்த படத்தின் வெற்றிக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

சட்டுனு பதில் சொன்ன ஸ்ருதி

அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடி வருவார் நடிகை ஸ்ருதிஹாசன். அந்த வகையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் லைவ்வில் ரசிகர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ரசிகர்கள் பலர் ஏராளமான கேள்விகளை கேட்டனர். அப்போது நெட்டிசன் ஒருவர் நீங்கள் வெர்ஜினா என கேள்வி எழுப்பினார். அதுவும் ஆங்கிலத்தில் தவறாக எழுதப்பட்டிருந்த ஸ்பெல்லிங்கை பார்த்து, ஸ்ருதிஹாசன் முதலில் வெர்ஜின் என்பதை ஸ்பெல்லிங் சரியாக தெரிந்து கொள்ளும்படி அந்த நெடிசனுக்கு பதிலடி கொடுத்தார். அது மட்டும் இல்லாமல் மற்றொருவர் உங்களுடன் டேட்டிங் செய்ய விரும்புவதாகவும், அது நடக்குமா எனவும் ஸ்ருதிஹாசனிடம் கேள்வி கேட்டார். இதற்கு உடனே நோ சொல்லி அவரை ஆஃப் செய்துவிட்டார் ஸ்ருதிஹாசன்.

வரம்பு மீறும் நெட்டிசன்ஸ்

என்ன தான் நடிகைகளாக இருந்தாலும் அவரவருக்கென்று தனி சொந்த வாழ்க்கை இருக்கின்றது. இதுபோல் சமூக வலைதளத்தில் வரம்பு மீறும் கேள்விகளை நெடிசன்கள் பலர் அவ்வப்போது கேட்டு வருகின்றனர். சமூக வலைதளத்தில் கமெண்ட்களை பதிவிடும் பொழுது பலமுறை யோசித்து பதிவிடுங்கள் என்று நடிகைகள் அறிவுரையும் கூறி வருகின்றனர். ஆனால் அது இதுவரை குறைந்த பாடில்லை. எப்பொழுது நடிகைகள் லைவில் கலந்துரையாடினாலும், இதுபோன்ற கமெண்டுகளும், தரமற்ற வார்த்தைகளும் பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கின்றார்கள். இதனை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here