பாஜக மற்றும் எதிர்கட்சி எம்.பிக்களின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் 20-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அமளி

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு கடந்த 13-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. அதானி குழும முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், இந்தியாவை அவமானப்படுத்திய விவகாரத்தில் ராகுல் காந்தி அவையில் மன்னிப்பு கோர வேண்டும் என்று ஆளும் பாஜகவும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி வருகின்றன. இதனால், கடந்த நாட்களாக மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் முடங்கின.

ஒத்திவைப்பு

இந்தநிலையில் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியது. அப்போது இந்திய ஜனநாயகம் குறித்து லண்டனில் பேசிய ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க கோரி ஆளும் கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். பதிலுக்கு அதானி குழும முறைகேடு விவகாரம் குறித்து விவாதிக்க கோரி எதிர்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். இதனால் 5-வது நாளாக இன்று நாடாளுமன்றம் முடங்கியது. மேலும் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் வருகிற 20-ம் தேதி வரை ஒத்திக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here