சென்னை நகரின் பல்வேறு பகுதியில் இன்று திடீரென மழை கொட்டியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கொளுத்தும் வெயில்

கோடை காலத்தின் முதல் மாதமான மார்ச் மாத தொடக்கத்திலேயே வெயில் வாட்டத்தொடங்கியது. குறிப்பாக ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயிலின் தாக்கம் இருந்தது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், மதியம் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தியிருந்தது.

கோடை மழை

இந்த நிலையில், சென்னையில் இன்று காலை திடீரென மழை பெய்தது. காலை 8 மணி முதல் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் 9 மணிக்கு மேல் மிதமான மழை பெய்தது. போரூர், ராமாபுரம், கிண்டி, ஈக்காட்டுதாங்கல், அசோக் நகர், வடபழனி, கோடம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. காலை வேலையில் மழை பெய்ததால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

3 நாட்களுக்கு மழை

தமிழ்நாடு வட உள் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 17.03.2023 முதல் 19.03.2023 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here