சன்னி லியோனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை வருகிற 31ஆம் தேதிக்கு தள்ளி வைத்து கேரளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பங்கேற்காமல் மோசடி
2012 ஆம் ஆண்டு ஹிந்தி சினிமா மூலம் திரையுலகிற்கு அறிமுகமான சன்னி லியோன் பல மொழிகளிலும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு ஓ மை கோஸ்ட் என்ற தமிழ் படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மலையாளத்திலும் அறிமுகமாகி ரங்கீலா என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சன்னி லியோன். சிறப்பு நிகழ்ச்சிகளிலும் ,கடை திறப்பு விழாக்களிலும் பங்கேற்று வரும் நடிகை சன்னி லியோன், சில ஆண்டுகளுக்கு முன் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள நடன நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்பந்தம் செய்ததாகவும், ஆனால் அவர் பங்கேற்காமல் மோசடி செய்ததாகவும் ஷியால் குஞ்சு முகமது என்பவர் போலீசில் புகார் அளித்திருந்தார்.
துன்புறுத்தியதற்கு சமம்
இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அதனை ரத்து செய்யக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் சன்னி லியோன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது சன்னி லியோனுக்கு எதிராக போதிய ஆதாரத்தை சமர்ப்பிக்கவில்லை. சரியான ஆதாரங்களை சமர்ப்பிக்காவிட்டால், மனுதாரர் அவரை துன்புறுத்தியதற்கு சமம் என்று கேரளா நீதிமன்றம் கூறியுள்ளது. இது மட்டும் இல்லாமல். அவர் குற்றமற்றவர் என முடிவு செய்யும் என கூறி வழக்கை வருகிற 31ஆம் தேதிக்கு தள்ளி வைத்தும் உத்தரவிட்டுள்ளது.