சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா தொடரின் ப்ரோமோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இனியா ப்ரோமோ

சஞ்சீவ், ஆலியா மானசா ராஜா ராணி தொடரில் ஜோடியாக நடித்து, நிஜத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். விஜய் டிவியில் பிஸியாக இருந்து வந்த நடிகை ஆலியா மானசா, குழந்தை பிறப்புக்கு பிறகு சன் டிவிக்கு மாறிவிட்டார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் நடித்து வருகிறார் ஆலியா. இந்நிலையில் இனியா தொடரில் ஆலியாவுக்கும் கதாநாயகனுக்கும் திருமணம் நடந்துள்ள ப்ரோமோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் ஆலியாவின் கணவர் சஞ்சய் இந்த ப்ரோமோவை வெளியிட்டிருந்தார். இந்த ப்ரோமோ இணையத்தில் வைரல் ஆகி வந்த நிலையில், இவர்களை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

கேள்வி கேட்கும் ஆலியா

அதுமட்டும் இல்லாமல், இனியா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும் சஞ்சீவ் ஆல்யாவுக்கு ஹாய் சொல்ல, அவர் ஹாய் அண்ணா என்று சொல்கிறார். என்னது அண்ணாவா அப்படி சொல்லாதீங்க என்று சஞ்சீவ் சொல்ல, சீரியலில் எனக்கு வேறு ஒருவருடன் திருமணம் முடிந்துவிட்டது. அதனால் அப்படித்தான் சொல்ல முடியும் என்று கூறியவுடன் சஞ்சீவ் ஷாக் ஆகிறார். அதன்பிறகு நான் ஷூட்டிங் போகிறேன் என்று சொல்லிவிட்டு சஞ்சீவ் கிளம்ப வீட்டுக்கு வந்தா தூங்குறீங்க, இல்லனா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து லேட்டா வறீங்க, இல்லனா கிரிக்கெட் விளையாட போறீங்க, நான் எப்போ உங்களை பார்க்கிறது என்று ஆல்யா அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here