கதைக்குத் தேவைப்பட்டால் நெருக்கமான காட்சிகளில் தாராளமாக நடிக்கலாம் என்று நடிகை இவானா கூறியுள்ளார்.
லவ் டுடே ஹிட்
நாச்சியார் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை இவானா. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ படத்திலும் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இரண்டு வருடங்களுக்காக எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருந்த நடிகை இவானாவுக்கு, லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான லவ் டுடே திரைப்படம் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது.
எகிறிய மார்க்கெட்
ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் கிட்டத்தட்ட ரூ.100 கோடிகளுக்கு மேல் வசூலை வாரி குவித்தது. லவ்டுடே திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யும் உரிமையையும் Phanton ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியது. ஹீரோயினாக நடித்த முதல் படமே சூப்பர்ஹிட் ஆனதும், இவானாவுக்கு மார்க்கெட் எகிறி உள்ளது. தற்போது இவர் நடிப்பில் கள்வன், எல்ஜிஎம், காம்ப்ளக்ஸ் போன்ற படங்களின் படப்பிடிப்புகாள் நடந்து கொண்டிருக்கின்றது.
ஓகே சொன்ன இவானா
இந்நிலையில், தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் இவானா கூறியிருப்பதாவது, “லவ் டுடே படத்தில் படுக்கையறை காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது. முதலில் இதை நான் எப்படி வீட்டில் சொல்வேன் என்று சங்கடமாக இருந்தது. பிறகு தைரியமாக வீட்டில் கூறிவிட்டேன். அவர்களும் கதைக்குத் தேவைப்பட்டால் தாராளமாக நடிக்கலாம் என்று அனுமதி அளித்தனர். எங்கள் வீட்டில் எனக்கு மிகவும் ஒத்துழைப்பு கொடுத்தனர். அதனால் நான் முழு கவனத்துடன் படத்தில் நடித்தேன் என்று இவானா கூறியுள்ளார். இதனால் இனி நெருக்கமான காட்சிகளுக்கு இவானா ஓகே சொல்லிவிடுவார் என்று சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் நிலவி வருகிறது.