இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க நடிகை நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
வரிசையில் பல படங்கள்
விக்ரம் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தில் திரிஷா, மிஷ்கின், அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலி கான், மேத்யூ தாமஸ், கவுதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைத்து வருகிறார். காஷ்மீரில் லியோ படப்பிடிப்பை முடித்து திரும்பிய இயக்குநர் மிஷ்கின், படப்பிடிப்பு மறக்க முடியாத அனுபவமாக இருந்ததாகவும், தனது அனுபவத்தையும் பகிர்ந்து இருந்தார். தற்போது லியோ படத்தின் சூட்டிங்கில் பிஸியாக இருக்கும் லோகேஷ், கைதி 2, விக்ரம் 2 என அடுத்தடுத்து படங்களை வரிசையில் வைத்துள்ளார்.
இணைந்த நயன்தாரா
பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது தயாரிப்பாளராகவும் மாற இருக்கிறார். மேயாத மான், ஆடை, குளு குளு உள்ளிட்ட படங்களை இயக்கிய ரத்னகுமார் இயக்க உள்ள அடுத்த படத்தை, லோகேஷ் கனகராஜ் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ரத்னகுமார் தற்போது இயக்க உள்ள படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த படம் குறித்து தகவல் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது இப்படம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் அனைத்தும் முடிந்து, சூட்டிங்கிற்கு தயாராக இருப்பதாக கூறுகின்றனர். இதுகுறித்து கூடுதல் தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.