சமீபத்தில் நடைபெற்ற “மீனா 40” நிகழ்ச்சியில் நடிகை மீனா பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

திறமையான நடிகை

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா, அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படத்தில் ரஜினிகாந்துடன் நடித்து மிகவும் பிரபலமானார். திரையுலக பயணத்தில் 40 ஆண்டுகளை கடந்த நடிகை மீனாவுக்கு, சமீபத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக “மீனா 40” என்ற பெயரில் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. முன்னணி நடிகர்கள் பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். 1990 ஆம் ஆண்டுகளில் இருந்து நாயகியாக நடிக்க துவங்கிய மீனா, ராஜ்கிரண்னுடன் என் ராசாவின் மனசிலே என்ற படத்தில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தினார். அது மட்டுமில்லாமல் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த எஜமான் படத்திலும் இவரது கதாபாத்திரம் பிரபலமாக பேசப்பட்டது.

எஜமான் அனுபவம்

முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், சத்யராஜ், சரத்குமார், விஜயகாந்த் உள்ளிட்ட அனைவரிடத்திலும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நடிகை மீனா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளிலும் பிசியாக இருந்து வரும் நடிகை மீனா தனது வாழ்க்கையில் பல பிரச்சனைகளையும், சோகங்களையும் தாண்டி இன்றும் ஒரு முன்னணி நடிகையாகவே இருந்து வருகிறார். “மீனா 40” நிகழ்ச்சியில் நடிகை மீனா பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதாவது சூப்பர்ஹிட் படமான எஜமான் திரைப்படத்தில் நடிக்கும் போது அவருக்கு 15 வயது தான் என்று கூறியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த அவ்வை ஷண்முகி படத்தின் அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார் நடிகை மீனா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here