நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷா 4ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

வெற்றி நாயகன்

அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகர் ஆர்யா. உள்ளம் கேட்குமே படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானாலும், இவர் நடித்த அறிந்தும் அறியாமலும் திரைப்படம் தான் முதலில் வெளிவந்தது. இந்த இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு ஒரு கல்லூரியின் கதை, கலாபக் காதலன், பட்டியல், வட்டாரம் என்று பல படங்கள் நடித்து விட்டார். இயக்குநர் பாலா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான நான் கடவுள் திரைப்படம் இவரது நடிப்புக்கு நல்ல அங்கீகாரத்தை பெற்று தந்தது. அதேபோல் ஏ எல் விஜய் இயக்கத்தில் இவர் நடித்த மதராசபட்டினம் திரைப்படமும் ஆர்யாவை முன்னணி நடிகராக நிலை நிறுத்தியது.

காதல் திருமணம்

நடிகை சாயிஷாவை நீண்ட நாட்களாக காதலித்து வந்த ஆர்யா, 2019 ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். சாயிஷா காப்பான், டெடி போன்ற படங்கள் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது. குழந்தைக்கு ஆரியானா என்று பெயரிட்டுள்ளனர். நேற்று 4ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய இந்த நட்சத்திர தம்பதியினர், தங்களது புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தனர் . இந்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது. ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here