புகைப்படம் வெளியிட்டு மகளிர் தின வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா.

சிறந்த நடிகை

கண்ட நாள் முதல் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியாவுக்கு பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆகும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சரத்குமார், ஜோதிகா நடித்த இந்த திரைப்படத்தில் ஆண்ட்ரியா தனது அபார நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். முன்னணி கதாபாத்திரத்தில் இவர் நடித்த முதல் படமே சூப்பர் ஹிட் ஆனதும், அடுத்தடுத்து வாய்ப்புகள் இவரை தேடி வந்தது. ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார் நடிகை ஆண்ட்ரியா. தரமணி, வடசென்னை போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக முத்திரை பதித்துக் கொண்டார்.

டப்பிங் ஆர்ட்டிஸ்ட்

2017 ஆம் ஆண்டு வெளியான துப்பறிவாளன் திரைப்படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து அனைவரையும் அசர வைத்தார். நடிகையாக மட்டுமல்லாமல் ஒரு டப்பிங் கலைஞராகவும் முன்னணியில் உள்ளார் ஆண்ட்ரியா. கமலஹாசன் நடிப்பில் சூப்பர் ஹிட் படமான வேட்டையாடு விளையாடு படத்தில் நாயகி கமலினி முகர்ஜிக்கு டப்பிங் கொடுத்திருப்பார். அதுமட்டுமில்லாமல் ஆடுகளம் படத்துக்கு டாப்ஸீக்கும், நண்பன் படத்தில் இலியானாவுக்கும், தங்க மகன் படத்தில் எமி ஜாக்சனுக்கும் டப்பிங் கொடுத்து தன்னை நிரூபித்து உள்ளார் நடிகை ஆண்ட்ரியா.

காந்த குரல்

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கண்ணும் கண்ணும் நோக்கியா என்ற அந்நியன் பட பாடலின் குரலுக்கு சொந்தக்காரர் ஆண்ட்ரியா. யாரடி நீ மோகினி படத்தில் ஓ பேபி ஓ பேபி என்ற பாடலும், ஆயிரத்தில் ஒருவன் படத்தில் உன் மேல ஆசைதான் போன்ற பாடல்கள் இவரை சினிமா துறையில் பாடகியாக நிலைக்க செய்தது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல பாடல்கள் பாடியுள்ளார். புஷ்பா படத்தில் ஓ சொல்றியா மாமா பாடல் மிகவும் பிரபலமானதும் குறிப்பிடத்தக்கது.

பெருமைப்படுகிறேன்

இப்படி பன்முகத் திருமகளை கொண்டுள்ள ஆண்ட்ரியா சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அடிக்கடி தனது போட்டோசூட் புகைப்படங்களையும், கவர்ச்சியான புகைப்படங்களையும் தெறிக்க விட்டு வருபவர். அதுமட்டுமில்லாமல் யோகாசனம் செய்தும், உடற்பயிற்சி செய்தும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் ஆண்ட்ரியா, இன்று சர்வதேச உலக மகளிர் தினத்தை ஒட்டி கொடுத்துள்ள போஸ் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. வெறும் போர்வையை மற்றும் போற்றிக் கொண்டு ஆண்ட்ரியா நின்று கொண்டிருக்கும் இந்த புகைப்படம் பல லைக்குகளை அள்ளி வருகின்றது. மேலும், “இன்றும், என்றென்றும் பெண்ணாக இருக்க பெருமைப்படுவதாகவும்” ஆண்ட்ரியா குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here