கொழு கொழு அழகால் ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருந்த நடிகை அஞ்சலி திடீரென உடல் மெலிந்து மிகவும் ஒல்லியாக மாறியிருக்கிறார்.
ஆரம்பத்தில் வெற்றி
கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை அஞ்சலி, தனது முதல் படத்திலேயே அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்தில் ஜீவாவுடன் இணைந்து நடித்திருப்பார் அஞ்சலி. ராம் இயக்கத்தில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு இவர் நடித்த அங்காடித் தெரு என்ற படமும் ரசிகர்களுடைய நல்ல வரவேற்பு பெற்றது. அதில் ரங்கநாதன் தெருவில் வேலை செய்யும் தொழிலாளர்களின் அவல நிலையை அப்பாட்டமாக காட்டி இருப்பார் இயக்குநர் வசந்தபாலன். விஜய் ஆண்டனி மற்றும் ஜிவி பிரகாஷ் இணைந்து இசையமைத்திருந்த இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது.
ஹிட் அமையவில்லை
மங்காத்தா, தூங்கா நகரம் போன்ற படங்களில் அஞ்சலி நடித்திருந்தாலும், எங்கேயும் எப்போதும் படம் தான் இவருக்கு கம்பேக் படமாக அமைந்தது. அதன்பிறகு எந்த படமும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இவருக்கு கை கொடுக்கவில்லை. தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகளில் நடித்திருந்தாலும், குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே ஹிட் கொடுத்துள்ளார். ஆனால், தனது துறுதுறு நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்று வைத்துள்ளார்.
உடல் மெலிந்து
கடந்த மூன்று வருடங்களாக எந்த ஒரு படமும் இவருக்கு சரியாக அமையாத நிலையில், ஜான்சி மற்றும் ஃபால் போன்ற வெப் தொடர்களில் நடித்து வந்தார். இந்த தொடர்களும் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. இந்நிலையில் அடிக்கடி தனது சமூக வலைதளத்தில் வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு வரும் நடிகை அஞ்சலி, சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதற்கு காரணம் அந்த புகைப்படங்களில் உடல் மெலிந்து மிகவும் ஒல்லியான தோற்றத்தில் இருக்கிறார் நடிகை அஞ்சலி. தனது கொழு கொழு அழகால் பல ரசிகர்களைக் கொண்டுள்ள அஞ்சலி, இப்படி ஸ்லிம்மாக மாறிவிட்டாரே என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது மலையாளத்தில் இரட்டா என்ற படத்தில் நடித்து வரும் அஞ்சலி, தமிழில் எப்பொழுது கம்பேக் கொடுப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.