பாகிஸ்தானில் தற்கொலைப்படை நிகழ்த்திய தாக்குதலில் 9 போல்சார் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்துள்ளனர்.
தற்கொலைப்படை
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சிப்பி நகரில் போலீசார் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வாகனம் மீது தற்கொலை தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த நபர், போலீஸ் வாகனம் மீது மோதியுள்ளார். அப்போது குண்டு வெடித்ததில் போலீஸ் வாகனம் நொறுங்கியது. இந்த தாக்குதலில் 9 போலீசார் பலியாகினர். 15-க்கும் மேற்பட்ட போலீசார் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அதிகரிக்கும் தாக்குதல்கள்
இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. பாகிஸ்தானில் சமீப காலமாக தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் மசூதி ஒன்றிலும், போலீஸ் தலைமை அலுவலகத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டது. பலுசிஸ்தானில் எரிவாயு மற்றும் கனிம வளங்களை சுரண்டுவதாக குற்றம்சாட்டி போராளிகள் குழு ஒன்று அரசாங்கத்துடன் சண்டையிட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.