கர்ணா திரைப்படம் தொடங்கி அன்பே சிவம், சந்திரமுகி, தூள், கில்லி, பூவெல்லாம் உன் வாசம் என டாப் ஸ்டார்களான ரஜினி, கமல் உள்பட பல ஹிட் ஆல்பங்கள் கொடுத்தவர் இசையமைப்பாளர் வித்யா சாகர். தமிழ் சினிமாவின் மெலடி கிங்காகத் திகழ்ந்த அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் , இந்தி என பல்வேறு மொழிகளிலும் இசையமைத்துள்ளார். தனது பிறந்த நாளைக் கொண்டாடிய நிலையில், திரைத்துறையில் 34 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டடுள்ளதாக வித்யாசாகர் தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது; இப்போது இருக்கக்கூடிய இசைத்துறையில் பல புதியவர்களுக்கு வரவேற்பு கொடுக்கப்படுகிறது. புதுமையை வரவேற்கிறார்கள். மெலோடி பாடல் என்பது அந்தந்த காலத்தில் மக்கள் ஏற்றுக்கொள்வதே. கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேநேரத்தில் மலையாளத்தில் பிஸியாக இருந்தேன். என்னைப் பொருத்தவரை எஸ்.பி.பாலசுப்பிரமணியன் தேவதூதன், அவருடைய பங்கு என்பது வார்த்தையால் சொல்ல முடியாது. அவருடைய இழப்பு என்பது பேரிழப்பு” என்றார்.