47 வயதாகும் மலையாள சீரியல் நடிகை ஆர்யா பார்வதியின் அம்மாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
47வயதில் தாயானார்
மலையாள தொடர்களில் நடித்து வருபவர் நடிகை ஆர்யா பார்வதி. தற்போது செம்பாட்டு, இளையவள் காயத்ரி போன்ற சீரியல்களில் நடித்து வரும் ஆர்யா பார்வதிக்கு 23 வயது ஆகிறது. இவரது அம்மாவுக்கு 47 வயதான நிலையில், தற்போது பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார். இவரின் அம்மா கர்ப்பமாக இருக்கும் பொழுது, ஆர்யா ஏற்கனவே அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.
வீட்ல விசேஷம்
ஆர்யா பார்வதி தாயாருக்கு குழந்தை பிறந்துள்ள செய்தியை கேள்விப்பட்ட பலரும், நடிகர் ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியான வீட்டுல விசேஷம் படத்தில் வரும் கதை போல் உள்ளது என்று கூறி வருகின்றனர். வீட்ல விசேஷம் படத்தில் ஆர்.ஜே. பாலாஜி திருமணம் ஆகும் வயதில் இருக்கும் நிலையில், அவரின் அம்மாவாக நடித்த ஊர்வசி குழந்தை பெற்றெடுப்பார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாக்கப்பட்டிருந்த இந்த படம், ரசிகர்களுடைய நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் ஆர்.ஜே. பாலாஜியுடன் அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். வீட்ல விசேஷம் படத்தைப் போலவே இந்த நடிகையின் வீட்டில் நிகழ்ந்து இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.