ஜெயிலர் படத்தில் இடம்பெற்றிருக்கும் பிஜிஎம் இசையை ரசிகர் ஒருவர் பழைய நோக்கியா 1100 செல்போனில் இசையமைத்து இணையத்தில் பகிர்ந்து உள்ளார்.

எதிர்பார்ப்பு

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்றது.

நட்சத்திர பட்டாளம்

ஜெயிலர் திரைப்படத்தில் கன்னட நடிகரான சிவராஜ் குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். விறுவிறுப்பாக நடந்து வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து பல புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின. தற்போது மங்களூரில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகின்றது.

நோக்கியா போன்

இந்நிலையில், ஜெயிலர் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் பிஜிஎம் இசையை ரசிகர் ஒருவர் பழைய நோக்கியா 1100 செல்போனில் இசையமைத்து இணையத்தில் பகிர்ந்து உள்ளார். தற்போது இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். அதிலும் சில நெட்டிசன்ஸ் நோக்கியா போனில் இருக்கும் இசையை எடுத்து தலைவர் படத்துக்கு போட்டுடீங்களே என்று கதறி வருகின்றனர். எது எப்படியோ இசை மூலம் நோக்கியா போன் மீண்டும் டிரெண்டாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here