குடிமகான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சாமர்த்தியமாக பேசி சர்ச்சையிலிருந்து தப்பித்துள்ளார் நடிகர் சதீஷ்.
மது, சிகரெட் பழக்கம்
குடிமகான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரை பிரபலங்கள் பட குழுவினர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடிகர் சதீஷ் பேசுகையில்; மது, சிகரெட் அடிக்காத டீடோட்டலராக நான் இருப்பதால் என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதற்காக நானும் இங்கு அறிவுரை சொல்லலாம் என்று இருந்தேன். ஆனால் டிரெய்லரில் அதை சரியாக இயக்குநர் சொல்லி இருக்கிறார்.
தெய்வத்திற்கு சமம்
பள்ளி, கல்லூரிகளில் மதுவையோ, சிகரட்டையோ தொடாமல் இருந்தால் அதன்பின் நாம் அதை வாழ்க்கையில் தொடவே மாட்டோம். நான் அப்படித்தான் இவற்றிலிருந்து ஒதுங்கினேன். இதுகுறித்து சில கல்லூரி நிகழ்ச்சிகளில் நான் பேசவும் செய்கிறேன். ஒரு பெண்கள் கல்லூரியில் நிகழ்ச்சிக்காக கலந்துகொண்ட போது கூட, அந்த கல்லூரியின் முதல்வர், என்னிடம் இதே விஷயத்தை வலியுறுத்தி பேச சொன்னார். அவர் அப்படி கேட்டுக்கொண்டது எனக்கு வேடிக்கையாக இருந்தது. ஏன் பேச வேண்டும் என அவரிடம் கேட்டதற்கு, ஆண்களுக்கு சமமாக பெண்களும் மது, சிகரெட் பழக்கத்தில் இருக்கிறார்கள் என கூறினார். ஆண்களும் பெண்களும் ஒருபோதும் சமமானவர்கள் இல்லை. பெண்கள் ஆண்களை விட மேலானவர்கள் சொல்லப்போனால் அவர்கள் தெய்வத்திற்கு சமம்” என்றார்.
உஷாராய் தப்பிய சதீஷ்
ஏற்கவனே சதீஷ் மற்றும் சன்னி லியோன் நடிப்பில் வெளியான “ஓ மை கோஸ்ட்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சன்னி லியோன் மற்றும் தர்ஷா குப்தா உடையை ஒப்பிட்டு சதிஷ் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த சர்ச்சை ஏற்பட்டதிலிருந்து நடிகர் சதீஷ் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருந்து வருகிறார். தற்போது “ஆண்களும் பெண்களும் ஒன்று இல்லை, பெண்கள் தெய்வம் போன்றவர்கள் என்று கூறி தப்பித்துவிட்டார் சதீஷ்” என்று நெட்டிசன்ஸ் கமெண்ட் செய்து வருகின்றனர்.