மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பிறந்தநாள் விழா

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அதிமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வெற்றி பெற்ற பிறகு இன்று அதிமுக தலைமை அலுவகத்திற்கு வந்த இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு, தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். 

மரியாதை

பின்னர் அதிமுக அலுவலக வளாகத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோரது சிலைகளுக்கு, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், அங்குள்ள கொடிக்கம்பத்தில் அதிமுக கொடியேற்றினார்.

பிரம்மாண்ட கேக்

அதன்பின்பு ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாளையொட்டி தயாரிக்கப்பட்ட 75 கிலோ எடைகொண்ட பிரம்மாண்டமான கேக்கை வெட்டிய இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதனை அனைவருக்கும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தம்பிதுரை, ஜெயக்குமார், வளர்மதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here