லியோ படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தாயார் மரணம் அடைந்த செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

கலக்கல் ப்ரோமோ

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிக்கும் ‘லியோ’ படத்தில் விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த், மிஸ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மேத்தியூ தாமஸ், மனோ பாலா மற்றும் பிக்பாஸ் ஜனனி போன்ற பல பிரபலங்கள் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். ‘தளபதி 67’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டு இருந்த இந்த படத்திற்கு சமீபத்தில் ‘லியோ’ என்று அதிகாரபூர்வமாக தலைப்பு வைக்கப்பட்டது. படத்தின் தலைப்பை அறிவிக்கும் விதமாக வெளியான ‘ப்ளடி ஸ்வீட்’ ப்ரோமோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தாய் மரணம்

லியோ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக திரிஷா சென்னை திரும்பினார். இதனால் திரிஷா படத்தை விட்டு விலகினார் என்று பல வதந்திகளும் பரவியது. ஆனால் தற்போது மீண்டும் காஷ்மீருக்கு திரும்பிய நடிகை திரிஷா, அங்கு எடுக்கப்பட்ட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது திரிஷா படகு சவாரி செய்யும் வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது. இந்நிலையில் இப்படத்தின் பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் தாயார் பிப்ரவரி 18ஆம் தேதி காலமானார். தாயார் மரணமடைந்த செய்தி கேட்டதும் தனது தாயின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக சென்னை திரும்பி உள்ளார் மனோஜ் பரமஹம்சா. இன்னும் சில தினங்களில் அவர் மீண்டும் காஷ்மீருக்கு திரும்பி விடுவார் என்றும் அவருக்கு பதிலாக மற்றொரு கேமரா மேன் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மனோஜ் பரமஹம்சா இயக்குநர் சங்கர் தயாரிப்பில் வெளியான ஈரம் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். விண்ணைத்தாண்டி வருவாயா, நண்பன், பீஸ்ட் போன்ற படங்களிலும் இவர் பணியாற்றி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here