நடிகர் மோகன்லாலிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கை வசம் பல படங்கள்
நடிகர் மோகன்லால் மலையாளத்தில் மட்டுமில்லாமல், தமிழிலும் பல படங்களில் நடித்து பிரபலமானவர் ஆவார். தமிழில் இவர் நடிப்பில் வெளியான இருவர், உன்னைப்போல் ஒருவன், ஜில்லா, காப்பான் போன்ற படங்கள் சூப்பர் ஹிட் ஆனதும் குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழில் ஜெயிலர் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார். இவரது நடிப்பில் மலையாளத்தில் கிட்டத்தட்ட 10 படங்களுக்கு மேல் சூட்டிங் நடந்து கொண்டிருக்கின்றது. அதில் சில படங்களுக்கு போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
5 மணி நேரம் விசாரணை
கடந்த சில மாதங்களாகவே மலையாள சினிமா மீது வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று மலையாள திரையுலகில் முன்னணி நடிகரான மோகன்லால் வீட்டிற்கு வருமானவரித்துறை அதிகாரிகள் திடீரென விசாரணைக்கு சென்றுள்ளனர். கொச்சியில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில், அவரது வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் மோகன்லாலிடம் விசாரணை மேற்கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சுமார் 5 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றதாகவும் கூறுகின்றனர். ஆனால் இதுகுறித்து எந்த ஒரு விபரங்களையும் வருமானவரித்துறை அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை. இதுபோல் ஏற்கனவே மலையாள நடிகரான பிரித்விராஜ், தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் உள்ளிட்ட பல முக்கிய சினிமா பிரபலங்களை வீட்டிலும் சோதனை நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் மோகன்லாலும் ஏற்கனவே வருமானவரித்துறை சோதனை நடத்திய மலையாளத் திரைப்பட தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது முக்கியமான ஒன்று. அதுமட்டும் இல்லாமல், மோகன்லால் நடித்த லூசிபர், திரிஷ்யம், புலி முருகன் போன்ற படங்களை இவர் தான் தயாரித்துள்ளார். மலையாள திரையுலகத்தை சுற்றி சுற்றி வருமானவரித்துறை விசாரணை நடத்துவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மலையாளத்தில் முன்னணி ஸ்டார் ஆக இருக்கக்கூடிய மோகன்லால் வீட்டில் இப்படி சோதனை நடந்திருப்பது கேரளா திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.