ஒரு விதமான அரியவகை நோயால் தான் பாதிக்கப்பட்டு இருப்பதாக நடிகை அனுஷ்கா ஷெட்டி கூறியுள்ளார்.
காணாமல் போன அனுஷ்கா
2006 ஆம் ஆண்டு ரெண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. தெலுங்கு படங்களில் நடிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வரும் நடிகை அனுஷ்கா செட்டி வேட்டைக்காரன் படத்தின் மூலம் மூன்று வருடங்களுக்குப் பிறகு தமிழ் படத்தில் நடித்தார். அதன் பிறகு சிங்கம், வானம், தெய்வத்திருமகள், சகுனி போன்ற பல படங்களில் நடித்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடிய நடிகை அனுஷ்கா ஷெட்டி “பாகுபலி” என்ற படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் வசப்படுத்தினார். இவர் நடித்த தேவசேனா கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. முன்னணி நடிகையாக இருந்த அனுஷ்கா கடந்த இரண்டு வருடங்களாக சைலண்டாகவே இருந்து வருகிறார்.
அனுஷ்கா சொன்ன விளக்கம்
35 வயதாகும் நடிகை அனுஷ்கா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருக்கிறார்என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவருக்கு ஒரு அரிய வகை நோய் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றிலும் கூறியுள்ளார் நடிகை அனுஷ்கா, அதில் அவர் கூறி இருப்பதாவது “எனக்கு அரிதான நோய் உள்ளது, சிரிக்க வேண்டிய சூழ்நிலையில் நான் சிரிக்க ஆரம்பித்தால் அதை கட்டுப்படுத்துவது என் கையில் இல்லை, தொடர்ந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை சிரித்துக்கொண்டே இருப்பேன். அப்படி நான் செய்து பலமுறை படப்பிடிப்பை நிறுத்த வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார் நடிகை அனுஷ்கா. இவர் இப்படி கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.