தமிழ் மற்றும் மலையாளத்தில் வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வரும் நடிகர் சம்பத் ராமுக்கு ஹாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
200 படங்கள்
முதல்வன் படத்தில் தொடங்கி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படம் வரை பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும், வில்லனாகவும் நடித்தவர் சம்பத் ராம். அஜித், விஜய், ரஜினி, கமல் என்று அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்த சம்பத் ராமுக்கு, பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் சம்பத் ராம். தமிழில் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் நடித்து அசத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடித்து வெளியான மாளிகபுரம் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார் சம்பத் ராம்.
கிடைத்த அங்கீகாரம்
தமிழ், மலையாளம் என்று தனது நடிப்பால் மிரட்டி வந்த நடிகர் சம்பத் ராம் தற்போது ஹாலிவுட்டில் நடித்து வருகிறார் என்பது அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில் கூறிகையில்,” நான் பல பெரிய நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளேன். என்னுடைய 25 வருட உழைப்புக்கு தற்போது பலன் கிடைத்துவிட்டது. தமிழில் விடுதலை மற்றும் தங்கலான் போன்ற படங்களில் நடித்து வருகிறேன். அதோடு த கிரேட் எஸ்கேப், தி பேர்ல் பிளேட் போன்ற ஹாலிவுட் படங்களிலும் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார். இவருக்கு ஹாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததை தெரிந்த ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.