காதலர் தினத்தையொட்டி காதலருடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நடிகை ஆயிஷாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிக் பாஸ் பிரபலம்

சன் டிவியில் ஒளிபரப்பான மாயா என்ற தொடர் மூலம் சீரியல்களில் நடிக்க துவங்கிய ஆயிஷா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் தொடரிலும் நடித்திருந்தார். அதன்பிறகு சத்யா தொடரின் மூலம் பிரபலமானார் நடிகை ஆயிஷா. சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 6 இல் பங்கேற்று நல்ல வரவேற்பையும் பெற்றார். ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா தொடரின் முதல் பாகம் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமும் நல்ல வரவேற்பை பெற்றது.

காதலர் அறிமுகம்

நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு தன் காதலருடன் ஆயிஷா வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் பரவிக் கொண்டிருக்கின்றது. பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பொழுதே தான் ஒருவரை காதலிப்பதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் ஆயிஷா கூறியிருந்தார். அதுமட்டுமில்லாமல் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன் காதலரின் புகைப்படத்தை மறைமுகமாக வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. தற்போது தன் காதலருடன் எடுக்கப்பட்ட ரொமான்டிக் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார் நடிகை ஆயிஷா. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை ஆயிஷாவுக்கு தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here