தனது திருமண நாளையொட்டி மறைந்த நடிகர் சேதுராமனின் மனைவி உமா சேது வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவு காண்போரை கண்கலங்க வைக்கிறது.
சில படங்களில் சேது
கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் மருத்துவரும், நடிகருமான சேதுராமன். குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே நடித்த சேதுராமன் மக்களிடையே மிகவும் பிரபலமானார். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் அவர் பல ரசிகர்களை கொண்டார். அதன்பிறகு 2020 ஆம் ஆண்டு மாரடைப்பால் திடீரென காலமானார் சேது.
சந்தானத்தின் நண்பேன்டா
நடிகர் சந்தானத்தின் உயிர் நண்பனான சேது இறந்த செய்தியை கேட்டு சந்தானம் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. அவர் இறப்புக்குப் பின்னர் அவரது மனைவி உமா அவ்வபோது சில பதிவுகளை சோசியல் மீடியாவில் ஷேர் செய்து வருவார். அந்த வகையில், உமா மற்றும் சேதுவின் திருமண நாளான பிப்ரவரி 12ஆம் தேதி அன்று ஏற்கனவே எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் எமோஷனல் ஆன கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டு இருப்பதாவது; “7 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளை நான் திரும்ப பார்க்கையில், காலம் வேகமாக கடந்து செல்கிறது என்பதை என்னால் உணர முடிகிறது. ஆனால், காதல் உணர்வு மட்டும் மாறாமல் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நகர்ந்து செல்ல, அத்துடன் உங்களின் வாழ்வில் இணைந்த நாளும் அதிகரித்து கொண்டு போகிறது. உங்களுக்கு வயதே ஆகாது.
உருக்கமான பதிவு
வானத்தை தொடும் ஆசைக்கொண்ட நீங்கள், எப்போதும் ஆர்வம் மிக்க மருத்துவராகவே இருக்கிறீர்கள். உங்கள் மீதான என் காதல் அளவற்றது. இதுவரை, நம் திருமண நாளை கொண்டாடியதே இல்லை. ஒவ்வொரு ஆண்டும் உங்கள் மீதான அன்பை வெளிப்படுத்தியுள்ளேன். அந்த இனிய நினைவுகளை நான் எப்போதும் நினைவில் கொள்வேன். இதையே இனி வரும் காலத்தில் தொடர்ந்து செய்வேன். இது நமது 7-வது திருமண ஆண்டாகும்” என்று உமா சேது பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த சேதுவின் ரசிகர்கள் உமாவிற்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அத்துடன் திருமண நாள் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.