நெகட்டிவிட்டியோட இருந்தால் வாழ்க்கை மிகவும் சின்னதாகிவிடும் என தனது ரசிகர்களுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா அட்வைஸ் கூறியுள்ளார்.
ஸ்லிம் பியூட்டி
2018 ஆம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களை மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் பக்கம் கொண்டு வந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. டியர் காம்ரேட் படத்திலும் இவர் நடித்த கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. தமிழ் பக்கம் நடிக்க மாட்டாரா என்று ஏங்கும் அளவிற்கு தனது ஸ்லிம் மற்றும் ஸ்டைலால் ஏங்க வைத்தார்.
ஹிட் படங்கள்
சுல்தான் படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்தார் ராஷ்மிகா மந்தனா. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அந்த படம் வரவேற்பை பெறவில்லை. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளில் வெளியான புஷ்பா படத்தின் மூலம் தனது நடிப்பை நிரூபித்தார் ராஷ்மிகா. அந்த படத்தில் இடம் பெற்ற ஸ்ரீ வள்ளி மற்றும் சாமி சாமி பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த படத்தில் ஓ சொல்றியா மாமா பாடலுக்கு சமந்தா நடனம் ஆடி அது வேற லெவல் ஹிட் ஆனதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல், கடந்த ஆண்டு இவர் நடித்த சீதாராமன் திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டானது. விஜய்யுடன் இணைந்து நடித்த வாரிசு படமும் நல்ல வரவேற்பு பெற்றது.
அட்வைஸ்
என்னதான் பல ஹிட் படங்களை கொடுத்தாலும் ராஷ்மிகாவை சுற்றி பல ட்ரோல்கள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றது. இவரது நடனம், ஆக்டிங் என்று அனைத்தையும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இதைப் பார்த்த ராஷ்மிகா, தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் ஒன்றை கொடுத்துள்ளார். இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, “ஹாப்பியா இருங்க.. தொடர்ந்து நம்பிக்கை வையுங்கள்.. உங்களது சந்தோஷமும், அமைதியும் அதிலிருந்து தான் கிடைக்கும் நெகட்டிவிட்டியோட இருந்தால் வாழ்க்கை மிகவும் சின்னதாகிவிடும்” எனக் கூறியுள்ளார் ராஷ்மிகா.