ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற பதான் திரைப்படம் வசூலை வாரி குவித்து வருகிறது.
பேராதரவு தந்த ரசிகர்கள்
நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோனே போன்ற பலரும் நடித்திருந்த ‘பதான்’ திரைப்படம், கடந்த மாதம் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷாருக்கான் நடித்து வெளிவந்த திரைப்படம் என்பதால், இந்த படத்திற்கு ரசிகர்களின் பேராதரவு கிடைத்துள்ளது. பதான் திரைப்படம் ரிலீஸ் ஆகி இரண்டு வாரங்கள் ஆன பிறகும் இப்படத்திற்கான வைப்ஸ் குறைவில்லை. 
வசூல் வேட்டை
பதான் திரைப்படம் ரூ.800 கோடியை தாண்டி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில் தற்போது மெகா ஹிட் அடித்துள்ளது. ‘பதான்’ திரைப்படம் எதிர்பார்த்ததை விட அதிக வசூல் பெற்றிருப்பதாகவும், மேலும் கூடிய விரைவில் ஆயிரம் கோடி வசூலை தொடும் என்றும் கூறுகின்றனர். பதான் திரைப்படம் சர்வதேச அளவில் 100 நாடுகளில் 2500 திரையரங்குகளில் வெளியானது. எதிர்பார்த்ததை விட அதிக அளவில் வசூலை பதான் திரைப்படம் பெற்றிருப்பதனால், ஷாருக்கான் நடித்து வெளியாக இருக்கும் ஜவான் திரைப்படத்தின் எதிர்பார்ப்பும் கூடி வருகிறது. இயக்குநர் அட்லி பாலிவுட்டில் இயக்கும் முதல் படம் என்பதாலும், ஷாருக்கான் நாயகன் என்பதாலும் இந்த படத்தின் எதிர்பார்ப்பு உயர்ந்து கொண்டே இருக்கின்றது. இன்னும் சில மாதங்களில் ஜவான் திரைப்படமும் வசூல் வேட்டையை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது













































