பிரபல பின்னணி இசை பாடகி வாணி ஜெயராம் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 78.
பின்னணி பாடகி
பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பாடியுள்ளார். 1921 ஆம் ஆண்டு ஹிந்தியில் குட்டி என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். 1974 ஆம் ஆண்டு தீர்க்க சுமங்கலி என்ற திரைப்படத்தில் கவிஞர் வாலி எழுதிய “மல்லிகை என் மன்னன் மயங்கும்” என்ற பாடலை எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் பாடினார். மராத்தி, ஒடியா, குஜராத்தி, ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என்று பல மொழிகளிலும் தனது குரலை பதிய வைத்துள்ளார் வாணி ஜெயராம். இவர் பல பக்தி பாடல்களையும் பாடியுள்ளார். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள வாணி ஜெயராம், தனது மெல்லிய குரலால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் என்றும் கூறலாம். சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதையும் பெற்றுள்ள இவருக்கு, சமீபத்தில் உயரிய விருதான பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது.
திடீர் மரணம்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார் வாணி ஜெயராம். இந்நிலையில் வீட்டில் நெற்றியில் காயங்களுடன் மர்மான முறையில் மரணமடைந்து சடலாமாக கிடந்ததாக கூறப்படுகிறது. படுக்கை அறையில் கீழே விழுந்து நெற்றியில் அடிபட்டு உயிரிழந்ததாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இவரது மறைவு திரைத்துறையினரை மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவதாக கூறி பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.