துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ”கிங் ஆப் கோதா” திரைப்படம் ஓணம் பண்டிகை அன்று வெளியாக உள்ளது.

வித்தியாசமான கெட்டப்

ஜி ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் ”கிங் ஆப் கோதா” படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் தீவிரமாக நடந்து வருகின்றது. துல்கருக்கு ஜோடியாக ஜகமே தந்திரம் புகழ் ஐஸ்வர்யா லஷ்மி இணைந்துள்ளார். ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரகுமான் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் துல்கர் சல்மான் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வருகிறார். பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் ”கிங் ஆப் கோதா” படத்தின் இரண்டாவது போஸ்டர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்றது. இந்த கூட்டணியில் ஏற்கனவே வெளியான ”செகண்ட் ஷோ” திரைப்படம் ரசிகர்களால் பெரிய அளவு பாராட்டைப் பெற்றது. அதேபோல ”கிங் ஆப் கோதா” படமும் ப்ளாக்பஸ்டர் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஓணம் ட்ரீட்

துல்கர் சல்மான் திரைத்துறைக்கு வந்து 11 ஆண்டுகால வாழ்க்கையை கொண்டாடும் விதமாக இந்த ஆண்டு ஓணம் பண்டிகையையொட்டி ”கிங் ஆப் கோதா” திரைப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ தகவலை இப்படகுழுவினர் வெளியிட்டுள்ளனர். துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் வித்தியாசமான கதை களத்துடன் இருப்பதுடன், அவை அனைத்தும் நல்ல வரவேற்பையும் பெற்று வந்துள்ளது. அந்த வரிசையில் ”கிங் ஆப் கோதா” திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கண்டிப்பாக ஓணம் பண்டிகை அன்று செம ட்ரீட் இருப்பது நிச்சயம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here