தங்கம், வெள்ளி, வைர நகைகள் மீதான சுங்க வரி பட்ஜெட்டில் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

பட்ஜெட்

2023-2024 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 2022-23 பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு நாள் கழித்து, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் ஐந்தாவது யூனியன் பட்ஜெட் இதுவாகும்.

வரி

2023-2024-ம் நிதியாண்டில் ரூ.15.43 லட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு முடிவு. நிதி பற்றாக்குறை மொத்த ஜிடிபியில் 4.5 சதவீதமாக கொண்டு வரப்படும். நடப்பு நிதியாண்டின் திருத்தப்பட்ட நிதி பற்றாக்குறை, வளர்ச்சியில் 6.4 சதவீதமாக இருக்கும் என கணிப்பு. சில துறைகளுக்கான அடிப்படை இறக்குமதி வரி 23 சதவீதத்திலிருந்து 11 சதவீதமாக குறைப்பு. மொபைல் போன், கேமரா, டிவி உதிரிபாகங்களுக்கான அடிப்படை இறக்குமதி வரி 2.5 சதவீதமாக குறைப்பு. கேமரா உதிரிபாகங்கள், லென்ஸ்கள் மற்றும் லித்தியம் பேட்டரிகளுக்கான வரி விலக்கு மேலும் 1 ஆண்டுக்கு நீட்டிப்பு. தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்வு. ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை ஈட்டுபவர்கள் வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. தங்கம், வெள்ளி, வைரம், பித்தளை, சிகரெட் உள்ளிட்டவற்றின் இறக்குமதி வரி அதிகரிப்பு. ரப்பர் மற்றும் ஆடைகளுக்கான இறக்குமதி வரியும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. மின்சார வாகன பேட்டரிகளுக்கான வரி குறைப்பு.

ஏற்றம் – இறக்கம்

மின்சார சமையலறை புகைபோக்கி, தங்கம், பிளாட்டினத்தால் செய்யப்பட்ட பொருட்கள், செம்பு ஸ்கிராப் கலவை ரப்பர், சிகரெட்டுகள் விலை உயரும். கேமரா, மொபைல் போன்களின் லென்ஸ், டிவி பேனல்களின் திறந்த கலங்களின் பாகங்கள், நீக்கப்பட்ட எத்தில் ஆல்கஹால், அமில தர பிளோர்ஸ்பார், இறால் உள்நாட்டு உற்பத்தி, பொம்மைகள், மிதிவண்டி, கார் மற்றும் பைக் உள்ளிட்ட பொருட்களின் விலை குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here