இந்த பேனா தமிழ்நாடு மக்களின் ஜனநாயகக் குரலாக இருக்க வேண்டும் என பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

ஆதரவு – எதிர்ப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக அவரது பேனாவை மெரினா கடற்கரை அருகே கடல்பகுதியில் சிலையாக அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் ஒரு சேர இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி மற்றும் சில மீனவ சங்கங்கள் பேனா சிலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

பேனா பொதுவானது

இந்நிலையில், பேனா சிலை அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளார் நடிகையும், பாஜகவிலிருந்து நீக்கப்பட்டவருமான காயத்ரி ரகுராம். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது; “பேனா பொதுவானது, பேனா சிலையை மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது வெறும் பேனாவாக இருக்கக்கூடாது, அனைவரும் சுற்றுலா பார்வையிடக்கூடிய புதிய ஹாலோகிராபிக் அல்லது லேசர் நிகழ்ச்சியுடன் தமிழ்நாட்டின் வரலாற்று பேனாவாக இருக்க வேண்டும். இது சுற்றுலா பயணிகளுக்கு சுவாரஸ்யமாக இருக்கும்.

ஜனநாயகக் குரல்

“பேனா என்பது பல விஷயங்களைக் குறிக்கும், பேனா ஒரு சிறந்த கருவியாகும், சிறந்த அர்த்தத்தைக் கொண்டுள்ளது. இந்த பேனா ஒரு அரசியல் கட்சிக்கு சேர்ந்தவையாக இருக்கக்கூடாது, இது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். புயல்களால் கூட சேதப்படுத்த முடியாத இந்த பேனா வலுவாக இருக்க வேண்டும். இந்த பேனா தமிழ்நாடு மக்களின் ஜனநாயகக் குரலாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

திமுகவில் இணைகிறாரா?

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட மோதலுக்கு பின் பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம், சமீப காலமாக திமுகவின் திட்டங்களை பாராட்டி வருவதால் அவர் விரைவில் திமுகவில் இணைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here