பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த ரச்சிதா முதல் முறையாக விஜய் டிவி மற்றும் டிஸ்னி ஹாட் ஸ்டாரின் அதிகாரப்பூர்வமான இணையதள பக்கத்திலிருந்து லைவில் ரசிகர்களிடம் பேசினார். அப்போது, ராபர்ட் மாஸ்டர் பற்றி சில தகவல்களை கூறி இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் இருக்கும்போது ராபர்ட் மாஸ்டர் உண்மையிலே ஒரு வளர்ந்த குழந்தையாக தான் இருந்து வந்தார். அவர் என்னதான் வெளியில் பார்ப்பதற்கு பெரிய ஆளாக தெரிந்தாலும், மனம் குழந்தைத்தனமாக தான் இப்ப வரைக்கும் இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது வெளியே வேறு விதமாக காட்டி இருந்தாலும், பிக் பாஸ் வீட்டிற்குள் ராபர்ட் மாஸ்டர் எப்போதும் என்னை கலாய்த்துக்கொண்டு என்னை சந்தோஷமாக வைத்துக் கொண்டிருந்த நபர். மேலும் அசீம், ஏடிகே ஆகியோர் தனக்கு பிடிக்காது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை ரச்சிதா கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here