நடிகர் கெளதம் கார்த்திக் – நடிகை மஞ்சிமா மோகன் திருமணம் சென்னையில் இன்று சிறப்பாக நடைபெற்றது.

காதல்

பிரபல நடிகர் கார்த்திக்கின் மகனான கெளதம் கார்த்திக், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கடல்’ திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். சிம்பு நடித்த ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். கெளதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனும் இணைந்து தேவராட்டம் படத்தில் நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக சொல்லப்பட்டது. இதனை சமூக வலைதளம் மூலம் அவர்கள் உறுதி செய்தனர். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்த காதல் ஜோடி, தங்களுக்கு நவ.,28-ம் திருமணம் நடைபெற இருப்பதாக அறிவித்தனர்.

திருமணம்

அதன்படி நடிகர் கெளதம் கார்த்திக் – நடிகை மஞ்சிமா மோகன் திருமணம் இன்று சிறப்பாக நடைபெற்றது. சென்னையில் நடந்த இந்த திருமண நிகழ்ச்சியில், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் பங்கேற்றனர். புதுமனத் தம்பதிகளுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here