இந்தியாவின் தயாரான முதல் தனியார் ராக்கெட்டான விக்ரம்-எஸ் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

தனியாருக்கு அனுமதி

விண்வெளி ஆய்வில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ முடிவு செய்தது. இதற்காக 2020-ம் ஆண்டு இன்ஸ்பேஸ் என்ற அமைப்பு நிறுவப்பட்டது. இதன்மூலம் ராக்கெட் செயற்கைகோள் தயாரிப்பில் தனியார் நிறுவனங்களும் அனுமதிப்பட்டன.

“விக்ரம்-எஸ்”

அந்த வகையில், தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ என்ற நிறுவனம் ‘விக்ரம்-எஸ்’ என்ற இந்த ராக்கெட்டை தயாரித்து உள்ளது. இந்தப் பணிக்கு ‘பிரரம்ப்’ என பெயரிடப்பட்டு உள்ளது. இது இந்தியாவில் தனியாரால் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்டாகும். இந்த ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் வின்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து இன்று (18.11.2022) காலை 11.30 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 83 கிலோ எடையை தூக்கி செல்லும் இந்த ராக்கெட், 2 இந்திய செயற்கைகோள்கள், ஒரு வெளிநாட்டு செயற்கைகோள்கள் உள்பட 3 செயற்கைகோள்களை சுமந்து சென்றது.

3 செயற்கைகோள்கள்

ஒரே நிலையை கொண்ட இந்த ராக்கெட் 545 கிலோ எடையும், 6 மீட்டர் உயரமும், 0.375 மீட்டர் விட்டமும் கொண்டது. 7 டன் உந்து சக்தியை கொண்டது. இந்த 3 செயற்கைகோள்களும் பூமியின் மேற்பரப்பில் இருந்து 120 கி.மீ. உயரத்தில் 300 வினாடிகளில் கொண்டு சென்று நிலை நிறுத்தப்பட்டு, ஆய்வுப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்ட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here