இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

வாக்குப்பதிவு

சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாக திகழும் இமாச்சலப் பிரதேசத்தில், 68 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிகள் அனைத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர். சிம்லா, மாண்டி, அமீர்பூர் மாவட்டங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பாஜ., காங்கிரஸ், ஆம் ஆத்மி

இமாச்சல் சட்டமன்றத்தில் மொத்தமிருக்கும் 68 தொகுதிகளுக்கு 24 பெண்கள் உட்பட 412 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலில் வாக்களிக்க 52 லட்சத்து 92 ஆயிரத்து 828 வாக்காளர்கள் தகுதியானவர்கள். பொதுமக்கள் வாக்களிப்பதற்காக மாநிலம் முழுவதுமாக 7,881 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பாரதிய ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கியிருக்கிறது. இடதுசாரி கட்சிகள் 12 இடங்களில் போட்டியிருக்கின்றன. இன்று பதிவாகும் வாக்குகள், அடுத்த மாதம் 8-ம் தேதி நடைபெறும் குஜராத் சட்டமன்ற தேர்தல் வாக்குகளுடன் சேர்த்து எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

பிரதமர் வேண்டுகோள்

இந்நிலையில், தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். வாக்காளர்கள் அனைவரும் முழு ஆர்வத்துடன் வாக்களித்து புதிய சாதனை படைக்குமாறும் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here