“ஓ மை கோஸ்ட்” திரைப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் நடிகை தர்ஷா குப்தா அணிந்திருந்த உடை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார் நடிகர் சதீஷ். மும்பையில் இருந்து வந்த சன்னி லியோன் நம் கலாச்சாரப்படி பட்டு சேலை கட்டியிருப்பதாகவும், கோயம்புத்தூரைச் சேர்ந்த தர்ஷா குப்தாவின் உடையை பார்க்குமாறும் கூறியிருந்தார். சதீஷின் இந்தப் பேச்சுக்கு பிரபல பாடகியான சின்மயி, பாடகர் ஸ்ரீனிவாஸ், நடிகை ஷர்மிளா, இயக்குநர் நவீன் உள்ளிட்ட பலர் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்தனர். இதனைதொடர்ந்து தான் பேசியது குறித்து விளக்கம் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டார் சதீஷ். அதில் அவர் பேசியதாவது, தர்ஷா குப்தா மாடர்ன் உடையில் வந்திருந்தார். ஆனால் சன்னி லியோன பட்டு சேலையில் வந்திருந்தார். இதை பார்த்த தர்ஷா குப்தா சன்னி லியோன் இப்படி வந்திருக்கிறார். இதனால் அப்செட் ஆகிவிட்டேன் என்றார். இதை மேடையில் சொல்லுங்கள் என்றார். அவர் சொல்லிதான் நான் பேசினேன்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here