பிரபல திரைப்பட விநியோகஸ்தர் கல்யாணின் மகன் ஹரிஷ் கல்யாண். 2010-ல் வெளியான ‘சிந்து சமவெளி’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். ஆயுத பூஜை தினத்தன்று ஹரிஷ் கல்யாண் தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும் தனது வருங்கால மனைவி நர்மதா உதயகுமாரையும் சமூக வலைதளத்தில் அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் – நர்மதா திருமணம் நாளை (28-ம் தேதி) நடைபெற உள்ளது. சென்னை திருவேற்காட்டில் உள்ள ஜிபிஎன் பேலஸ் திருமண மண்டபத்தில் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் அவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here