மும்பையில் மாடல் அழகியும், நடிகையுமான அகன்ஷா மோகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாடல் அழகி

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வந்தவர் அகன்ஷா மோகன். 30 வயதான இவர், மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இவர் ஷிபெய்ல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து சியா என்ற திரைப்படம் கடந்த 16-ம் தேதி வெளியானது. சில விளம்பரங்களிலும் அகன்ஷா மோகன் நடித்துள்ளார். இந்நிலையில், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மும்பை அந்தேரி பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்த அகன்ஷா, தனது அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தற்கொலை

அகன்ஷா மோகன் வெகு நேரமாகியும் தனது அறையில் இருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவிடத்திற்கு வந்த போலீசார், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்குள்ள மின் விசிறியில் அகன்ஷா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததார். இதனை தொடர்ந்து அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த அறையில் இருந்து ஒரு கடிதத்தையும் கைப்பற்றினர். அதில், ‘எனது மரணத்திற்கு யாரும் காரணமல்ல… யாரையும் தொல்லை செய்ய வேண்டாம்’ என எழுதப்பட்டிருந்தது. அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் நடிகையின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here