விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘ராஜா ராணி 2’ சீரியலில் நடித்து வரும் பாலாஜிக்கு தற்போது திருமணம் நடந்து முடிந்துள்ளது. பாலாஜியின் திருமணத்திற்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். குறிப்பாக அவர் நடிக்கும் ‘ராஜா ராணி 2’ சீரியலின் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். பாலாஜி தன்னுடைய திருமணத்தை பற்றி எந்த அறிவிப்பையும் வெளியிடப்படவில்லை என்றாலும் அவரது திருமண புகைப்படங்களை பார்த்ததும் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.