தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். 2017-ம் ஆண்டு வெளியான மேயாத மான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான அவர், அதைதொடர்ந்து, கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், எஸ்.ஜே. சூர்யாவுடன் மான்ஸ்டர், அருண் விஜயுடன் மாஃபியா உள்ளிட்ட படங்களில் நடித்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான யானை, திருச்சிற்றம்பலம் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து ராகவா லாரன்ஸின் ருத்ரன், ஜெயம் ரவிக்கு ஜோடியாக அகிலன், எஸ்.ஜே.சூர்யா உடன் பொம்மை, சிம்புவின் பத்து தல, கமல்ஹாசனின் இந்தியன் 2 என பல படங்களை கைவசம் வைத்துள்ளார். தனது காதலனுடன் சுவிட்லாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரியா பவானி சங்கர், தான் முதல்முறையாக ஸ்கை டைவிங் செய்தது குறித்த அனுபவங்களை பகிர்ந்துள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.