ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அதிரடி மற்றும் நகைச்சுவை கலந்த திரைப்படமான ‘Bullet Train’ திரைப்படம் அமெரிக்காவில் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாக இந்தியாவில் வெளியாகவுள்ளது. 

அதிரடி காம்போ

‘டெட்பூல் 2’ படத்தின் இயக்குநர் டேவிட் லீட்ச் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Bullet Train’. இந்த படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் பிராட் பிட் நடித்துள்ளார். ஜோய் கிங், பிரைன் டைரி ஹென்றி, ஆரோன் டெய்லர், கரேன் ஃபுகுஹாரா, லோகன் லெர்மன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஹாலிவுட்டின் மிகவும் பிரபலமான சில முன்னணி நட்சத்திரங்களும் இதில் இணைந்து நடித்துள்ளனர். அகாடமி விருது பெற்ற நடிகை சாண்ட்ரா புல்லக் இவருடன் இணைந்து ‘Bullet Train’ படத்தில் நடித்துள்ளார்.

முன்னதாக ரிலீஸ்

சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் உலகம் முழுவதும் வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஆனால் இந்தியாவில் மட்டும் அதற்கு ஒரு நாள் முன்னதாகவே வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘Bullet Train’ திரைப்படம் தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில், ஆகஸ்ட் 4-ஆம் தேதியே, இந்தியாவில் உள்ள திரையரங்குகளில் வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படம் அதிரடி, நகைச்சுவை கலந்த படமாக உருவாகி உள்ளது. உலக ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘Bullet Train’ திரைப்படம் இந்தியாவில் முன்னரே வெளியாவது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here