செஸ் விளையாடும் பழைய   புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் ரஜினிகாந்த் அதை தனக்கு பிடித்த உட்புற விளையாட்டு எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டுக்கு பெருமை

முதன்முறையாக இந்தியாவில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் தொடரை நடத்தும் வாய்ப்பை தமிழகம் பெற்றிருப்பதால், செஸ் ஒலிம்பியாட்டை உலகமே வியக்குமளவிற்கு நடத்தி அசத்தும் வகையில் தமிழக அரசு மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வு தமிழகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடக்கிறது. இன்று (ஜூலை 28) முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறவுள்ளன.  180-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 2000-க்கும் அதிகமான வீரர்கள், வீராங்கனைகள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டு விளையாடுகின்றனர்.

மோடி பங்கேற்பு

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மேலும் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கும், இசையமைப்பாளர்களுக்கும் துவக்க விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் போட்டியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தான் செஸ் விளையாடும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளதாவது; “செஸ் ஒலிம்பியாட் 2022. நான் மிகவும் விரும்பும் ஒரு உள்ளரங்க விளையாட்டு. அனைத்து செஸ் போட்டியாளர்களுக்கும் என் வாழ்த்துகள்.. கடவுள் ஆசீர்வதிக்கட்டும்”. இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here